கல்வியெனும் தலைப்பினிலே கவிதையிதை நானெழுத
கல்வியெனும் செல்வமதை கருணைநிறை இறையோனே
முழுஞானம் நிறைந்தோனே முதலவனே அல்லாஹ்வே
முழுமனதாய் வேண்டுகிறேன் நிறைவாக அருள்புரிவாய்!
கல்வியெனும் செல்வமதை கருணைநிறை இறையோனே
முழுஞானம் நிறைந்தோனே முதலவனே அல்லாஹ்வே
முழுமனதாய் வேண்டுகிறேன் நிறைவாக அருள்புரிவாய்!
வற்றாத கடலதனின் ஆழமதைக் கண்டாலும்
வளமான கல்வியதன் கரைகாணல் முடியாதே!
எத்துறை தன்னதிலும் நாம் பட்டங்கள் பெற்றாலும்
எல்லாக் கல்வியும் நாம் பெற்றவராய் முடியாதே!
வளமான கல்வியதன் கரைகாணல் முடியாதே!
எத்துறை தன்னதிலும் நாம் பட்டங்கள் பெற்றாலும்
எல்லாக் கல்வியும் நாம் பெற்றவராய் முடியாதே!
இவ்வுலகின் ஞானமெல்லாம் ஈருலகை ஆளுகின்ற
இறையோன் அவனுக்கே என்பதை நாம் மறக்கலாமோ?
மறக்காமல் அவனிடம் நாம் பெறுகின்ற கல்வியிதை
மாண்புடன் பெற்றிடவே வேண்டிடுவோம் அவனிடமே!
இறையோன் அவனுக்கே என்பதை நாம் மறக்கலாமோ?
மறக்காமல் அவனிடம் நாம் பெறுகின்ற கல்வியிதை
மாண்புடன் பெற்றிடவே வேண்டிடுவோம் அவனிடமே!
அன்பின் உறைவிடமாம் அறிவின் இருப்பிடமாம்
அண்ணல் நபிகோமான் முஹம்மது நபியவர்கள்
சீனநகர் சென்றேனும் சீர்கல்வி பெறுகவென
செப்பிட்ட வார்த்தையதன் சிறப்பதுவும் இதனாலே..!
அண்ணல் நபிகோமான் முஹம்மது நபியவர்கள்
சீனநகர் சென்றேனும் சீர்கல்வி பெறுகவென
செப்பிட்ட வார்த்தையதன் சிறப்பதுவும் இதனாலே..!
கண்ணுடையோர் என்போர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையோர் கல்லாதவர் என்றதோர் பெருங்குறள்
பொய்யாமொழிப் புலவன் வள்ளுவனார் வாக்கதுவும்
பொய்யாக வில்லையன்றோ பொறுமையதாய் சிந்திப்பீர்!
புண்ணுடையோர் கல்லாதவர் என்றதோர் பெருங்குறள்
பொய்யாமொழிப் புலவன் வள்ளுவனார் வாக்கதுவும்
பொய்யாக வில்லையன்றோ பொறுமையதாய் சிந்திப்பீர்!
மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கிப் பார்க்கையில்
மன்னனில் கற்றோன் சிறப்புடையோன் என்பதைப்போல்
கல்வியின் பெருமையிது கண்முன்னே தெரிவதனை
கவனத்தில் உணர்ந்து நாம் கற்றிடல் வேண்டுமப்பா!
மன்னனில் கற்றோன் சிறப்புடையோன் என்பதைப்போல்
கல்வியின் பெருமையிது கண்முன்னே தெரிவதனை
கவனத்தில் உணர்ந்து நாம் கற்றிடல் வேண்டுமப்பா!
செல்வமது கோடிதான் சேர்த்து நாம் வைத்திடினும்
சிறப்புமிகு செல்வமதாம் கல்விக்கு நிகராமோ?
காலத்தால் அழியாத கள்வர்கள் காவாத
காற்று நீர் தீ தீண்டா செல்வமது கல்வியன்றோ?
சிறப்புமிகு செல்வமதாம் கல்விக்கு நிகராமோ?
காலத்தால் அழியாத கள்வர்கள் காவாத
காற்று நீர் தீ தீண்டா செல்வமது கல்வியன்றோ?
இஸ்லாத்தில் இறையோனும் ‘இக்ரஃ’எனும் வார்த்தை
இனியமறை குர்ஆனில் வஹீமுலம் முதலினிதாய்
ஓதிடுவீர் என்றுரைத்து கல்வியின் சிறப்பதனை
உலகோர்க்கு உணர்த்துவதை உற்றே உணர்ந்திடுவோம்!
இனியமறை குர்ஆனில் வஹீமுலம் முதலினிதாய்
ஓதிடுவீர் என்றுரைத்து கல்வியின் சிறப்பதனை
உலகோர்க்கு உணர்த்துவதை உற்றே உணர்ந்திடுவோம்!
No comments:
Post a Comment